தமிழகத்தில் கால் வைக்க நடுங்கும் சசிகலா புஷ்பா!

வியாழன், 25 ஆகஸ்ட் 2016 (09:01 IST)
முதலமைச்சர் ஜெயலலிதாவை எதிர்துக் கொண்ட சசிகலா புஷ்பா, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அவர் மீதும், அவரது கணவர், மகன் மீதும் வழக்குகள் பாய்ந்தது.


 


இதை அடுத்து, பண மோசடி, பாலியல் வழக்குகளில், முன் ஜாமீன் கேட்டு மதுரை நீதிமன்ற கிளையில் சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 29ம் தேதி சசிகலா புஷ்பா உட்பட குடும்பத்தினர், நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

இது தொடர்பாக டெல்லியில் இருந்து சசிகலா புஷ்பா கூறியதாவது, “முன் ஜாமீன் மனுவில் உள்ள கையெழுத்து தொடர்பான சந்தேகத்தை தெளிவுபடுத்த நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கெல்லாம் நேரில் ஆஜராகத் தேவையில்லை. உச்ச நீதிமன்றம் சென்றாவது எப்படியும் முன் ஜாமீன் வாங்கிவிடுவேன். முன் ஜாமீன் வாங்காமல் தமிழகத்தில் கால் வைக்க மாட்டேன்.

போயஸ் கார்டனில் நடந்ததை அவ்வளவு சீக்கிரம் மறந்து விட முடியாது. அவர்கள் என்னை அடித்ததுடன், போலீஸ்காரர்கள் கையில் லத்தியைக் கொடுத்து அடிக்கச் சொன்னார்கள். ரத்தம் வரும் அளவுக்கு அடித்தார்கள். நான் வாங்கிய அடிகளுக்கு பதில் வேண்டும். இப்போது சமரசம் பேசுகிறார்கள். எனக்கு ஜெயலலிதா எதுவும் செய்யவில்லை. எல்லாம் நான் வணங்கிய கடவுள் கொடுத்தது.” என்றார்.

வெப்துனியாவைப் படிக்கவும்