பன்னீர் செல்வம் நல்லவர் என நினைத்தேன்: சசிகலா புஷ்பா பகீர் பேட்டி!

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (19:04 IST)
சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்துக்கொண்டு மீண்டும் சர்ச்சைகள் மூலம் கவனத்தை பெற்றுள்ளார் சசிகலா புஷ்பா. இதற்கு முன்னர் திருச்சி சிவாவை அறைந்து அதிமுக கட்சியை விட்டு நீக்கப்பட்டார். 
 
அதன் பின்னர் இவர்களுடையை புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. தற்போது இரண்டாவது திருமணத்தை மேற்கொண்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ள இவர் பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில் சசிகலா புஷ்பா கூறியது பின்வருமாறு..
 
41 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதை பலர் கேலி கிண்டல் செய்து வருகின்றனர். அதைப்பற்றி நான் கவலைப்படமாட்டேன். நான் வாழ்வதற்கு இன்னும் நீண்ட காலம் இருக்கிறது. 
 
சின்னம்மாவை நான் ஆரம்பத்தில் விமர்சித்தது உண்மைதான். பன்னீர் செல்வம் நல்லவெ என நினைத்தேன். ஆனால், அவர் பதவிக்காக வாழ்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் பதவிக்காக காலில் விழுந்து தற்போது சின்னாமாவுக்கு துரோகம் செய்துவிட்டார். 
 
சின்னம்மா மிகவும் நல்லவர். எங்கள் திருமணத்திற்கு சின்னம்மாவிற்கு பத்திரிக்கை கொடுக்க நினைத்தோம். ஆனால், முடியவில்லை. எனவே, விரைவில் என் கணவருடன் சிறைக்கு சென்று சின்னம்மாவின் ஆசி பெற்று வருவோம் என தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்