’உயிருக்கு ஆபத்து உள்ளது’ - சசிகலா புஷ்பா மனு

வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (02:21 IST)
தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எம்.பி சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்துள்ளார்.
 

 
டெல்லி விமான நிலையத்தில் திருச்சி சிவா எம்.பி.யை தாக்கிய விவகாரத்தை அடுத்து சசிகலா புஷ்பா அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.
 
இதனையடுத்து, தன்னை முதலைமைச்சர் ஜெயலலிதா தாக்கியதாக பாராளுமன்றத்தில் புகார் அளித்திருந்தார். மேலும், தனது உயிருக்கு அச்சுற்றுத்தல் இருக்கிறது என்றும் குறிப்பிட்டு இருந்தார். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி உயர் நீதிமன்றத்தில் எம்.பி சசிகலா புஷ்பா மனு தாக்கல் செய்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்