இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் சசிகலா...

வியாழன், 9 பிப்ரவரி 2017 (11:28 IST)
பரபரப்பான தமிழக அரசியல் சூழ்நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநரை, அதிமுக பொதுசெயலாளர் சசிகலா இன்று மாலை சந்தித்து பேச உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா தரப்பு, தன்னை மிரட்டி, கட்டாயப்படுத்தி ராஜினாமா கடிதத்தை வாங்கிக் கொண்டதாக தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கொடுத்த பேட்டியை அடுத்து, தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்பை எட்டியிருக்கிறது. 
 
சசிகலா தரப்பிற்கும், ஓ.பி.எஸ் தரப்பிற்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. எனவே, அதிகாரப்பூர்வமான முதலமைச்சர் இல்லாத காரணத்தினால், அரசு எந்திரம் முடங்கி போயுள்ளது. 
 
134 அதிமுக எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்கள் வசம் இருப்பதாக,சசிகலா தரப்பு கூறியது. தற்போது அதிலிருந்து 5 விலகி, ஓ.பி.எஸ் வசம் சென்றுள்ளனர். மேலும், சட்டசபையில் தன்னுடைய பலத்தை நிரூபிப்பேன் என, ஓ.பி.எஸ் கூறியுள்ளார். எனவே, இன்னும் பல எம்.ல்.ஏக்கள் தன் பின்னால் வருவார்கள் என அவர் நம்புவதாக தெரிகிறது. 
 
எனவே, தங்கள் வசம் உள்ள எம்.எல்.ஏக்கள் ஓ.பி.எஸ் பக்கம் சென்றுவிடக்கூடாது என, அவர்களை வெளியேற விடாமல், நட்சத்திர ஹோட்டல்களில் சசிகலா தரப்பு சிறை வைத்துள்ளது. ஆளுநரின் வருகைக்குப் பின், அவரிடம் சென்று ஆட்சி அமைப்பது தொடர்பாக கோரிக்கை வைக்க சசிகலா தரப்பு முடிவு செய்திருந்தது.
 
இந்நிலையில், இன்று மாலை, விமானம் மூலமாக, ஆளுநர் வித்யாசாகர் ராவ், மும்பையிலிருந்து தமிழகத்திற்கு வருகிறார். எனவே, அவரை மாலை 5 மணியளவில் சசிகலா தரப்பு சந்திக்க உள்ளதாக செய்திகள் வெளியிஆகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்