சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே கான்க்ளேவ் விவாத கருத்தரங்கில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மேடையில் பேசிக்கொண்டிருக்கும் பேதே, அங்கிருந்து கிளம்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா டுடே நிறுவனம், ஆண்டுதோறும் கான்க்ளேவ் என்ற விவாத கருத்தரங்கு நிகழ்ச்சியை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. அதில் அரசியல், கலை, இலக்கியம், பொருளாதாரம் தொடர்புடைய பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு பேசுவார்கள்.
இதுவரை டெல்லியில் மட்டுமே நடைபெற்று வந்த இந்த கருத்தரங்கு, முதன் முறையாக சென்னையில் நடத்தப்பட்டது. அதில், 6 மாநில முதலமைச்சர்கள் முதல் நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதேபோல், முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோரும் கலந்து கொண்டனர்.