சசிகலாவிற்கு எதிராக ஓ.பி.எஸ் களம் இறங்கியவுடன், அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவே முதலமைச்சராக முன்மொழியப்பட்டார். ஆனால், சொத்துக்குவிப்பு வழக்கு அவருக்கு பாதகமாக அமையவே, அந்த இடத்திற்கு எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தார் சசிகலா. தற்போது பெங்களூர் சிறையில் இருக்கிறார் சசிகலா.
இன்று காலை முதல் சட்டசபையில் நடந்த அனைத்து நிகழ்வுகளையும், சிறை அதிகாரிகள் சசிகலாவிற்கு சொல்லிக் கொண்டே இருந்தார்களாம். இறுதியில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றார் என்ற செய்தியை கூறிய போது, சசிகலா கபாலி ரஜினி ஸ்டைலில் “மகிழ்ச்சி” என்ற வார்த்தையைல் தனது சந்தோஷத்தை வெளிப்படித்தியதாக சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.