தமிழில் இந்தியா டுடே; உளறிக் கொட்டிய சசிகலா (வீடியோ)

திங்கள், 9 ஜனவரி 2017 (16:11 IST)
சென்னையில் இன்று இந்தியா டுடே நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா, விபரம் தெரியாமல் பேசிய விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
இந்தியா டுடே பத்திரிக்கை சென்னையில் நடத்திய தென்னக மாநாட்டை, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா இன்று நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். அப்போது அவரிடம், இந்தியா டுடே பத்திரிக்கையாளர், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? என கேள்வி கேட்டார். இதுதான் ஒரு ஊடகம் சசிகலாவிடம் கேட்ட முதல் கேள்வி ஆகும். 
 
அதற்கு பதிலளித்த சசிகலா “பிராந்திய மொழிகளில் வெளிவரும் இந்தியா டுடே,  தமிழ்நாட்டிலேயும் வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது” எனக்கூறினார். 
 
உண்மையில், இந்தியா டுடே புத்தகம் தமிழ் பதிப்பு நிறுத்தப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. அது தெரியாமல், தமிழில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என சசிகலா பேசிய விவகாரம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஏற்கனவே, அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளிடம் சரியாக பேச தெரியாமல் அவர் திணறினார் என செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்தியா டுடே பற்றி இப்படி விபரம் தெரியாமல் அவர் உளறிக்கொட்டிய விவகாரம் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு வருகிறது.

 

.@AIADMKOfficial Gen.Secy.#Sasikala gets teary eyed as she talks about Amma to @rahulkanwal, Managing Editor @IndiaToday at #SouthConclave17 pic.twitter.com/UdfQq0HcpQ

— India Today (@IndiaToday) January 9, 2017

வெப்துனியாவைப் படிக்கவும்