கருவறைக்குள் நுழைந்த சசிகலா: வெடிக்கும் சர்ச்சை!

புதன், 10 ஆகஸ்ட் 2016 (08:05 IST)
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் சென்று வழிபாடு செய்தார். சசிகலாவை கோயில் கருவறைக்குள் சென்று வழிபட அனுமதித்த நிர்வாகம் அனைத்து தரப்பினரையும் அனுமதிக்குமா என்ற சர்ச்சை எழுந்துள்ளது.


 
 
கடந்த ஆடிவெள்ளிக்கிழமையன்று சசிகலா மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தினார். பின்னர் பலத்த பாதுகாப்புடன் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்த அவரை ஆண்டாள் கோயிலுக்கு அழைத்து சென்றார் அறங்காவலர் குழுத் தலைவர்.
 
பின்னர் அவரை அறங்காவலர் குழுத்தலைவர் ரவிச்சந்திரன் ஆண்டாள் கோயில் கருவறைக்குள் சென்று சாமி கும்பிட வைத்தார் என செய்திகள் வந்தன. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையாகி உள்ளது.
 
சசிகலாவை கருவறைக்குள் சென்று வழிபட அனுமதித்த நிர்வாகம் அனைத்து தரப்பு மக்களையும் கருவறைக்குள் நுழைய அனுமதிக்குமா என்பதே கேள்வியாக உள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்