துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்

திங்கள், 21 செப்டம்பர் 2015 (05:42 IST)
துப்புரவு தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன் வர வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
 

 
இது குறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
தமிழகம் முழுவதும் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சிகளில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட துப்புரவு தொழிலாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பகுதி நேர ஊழியர்கள் என அறிவிக்கப்பட்டு, இவர்களுக்கு மிகக் குறைந்த தொகுப்பூதியம் மட்டுமே வழங்கப்பட்டுகிறது.
 
எனவே, பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, இவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் சுமார் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.
 
மேலும், வேலை நியமனத் தடையை நீக்கி, மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி இயக்குபவர்களை, இதர ஊராட்சி ஊழியர்களைப் போன்று ரே மாதிரியான சம்பளம் அமல்படுத்த அரசு முன்வர வேண்டும்.
 
தமிழகத்தில் பல ஆண்டுகளாக தொகுப்பூதியம், தினக்கூலி துப்புரவு பணியாளர்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழலில் பல துப்புரவு தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 
எனவே, இவர்களது கோரிக்கைகளை நிறைவேற்ற, தமிழக அரசு காலம் தாமதம் இன்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்