சந்தீப் சக்சேனா தேர்தல் அதிகாரியாக தொடர்ந்தால் 2016 தேர்தல் நேர்மையாக நடக்காது: ராமதாஸ்

புதன், 1 ஜூலை 2015 (23:25 IST)
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக சந்தீப் சக்சேனா தொடரக் கூடாது. அவ்வாறு அவர் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்தால், 2016 ஆம் ஆண்டுச் சட்ட மன்றத் தேர்தல் நியாயமாக நடைபெறாது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்துத் தெரிவித்துள்ளார்.
 
இது குறித்து, கோவையில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக தற்போது உள்ள சந்தீப் சக்சேனா தொடரக் கூடாது. அவ்வாறு அவர் அந்தப் பதவியில் நீடித்தால், வரும் 2016ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழகச் சட்டசபை தேர்தல் நேர்மையாக நடைபெறாது.
 
ஆர்.கே. நகரில் இடைத் தேர்தலில் தேர்தல் விதிமீறல்கள் நடந்ததற்கான ஆதாரங்கள் இல்லை எனத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா கூறியுள்ளார். ஆனால், தேர்தல் நேரத்தில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது. இதற்கான ஆதாரங்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையம் கவனத்திற்குப் பல்வேறு தரப்பினர் கொண்டு சென்றுள்ளனர் என்றார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்