நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை தூங்குவதிலிருந்தே செய்தியாளர் சிந்திப்பை நடத்த்தியதில்லை. அனேகமாக தமிழகத்தில் ஒரு அரசியல் கட்சியை துவங்கி செய்தியாளர்களை சந்திக்காத ஒரே அரசியல் கட்சித் தலைவர் என்றால் அது விஜய் மட்டுமே. அவரும் செய்தியாளர் சந்திப்பை நடத்துவதில்லை.
அவர் செல்லும் வழியில், விமான நிலையத்தில் எங்கேனும் செய்தியாளர்கள் அவரிடம் எதுவும் கேள்வி கேட்டாலும் காதில் விழாத போல சென்று விடுகிறார். இனி எப்போதுமே விஜய் இப்படித்தான் இருப்பார் என மக்களுக்கு புரிந்து விட்டது. ஆனால், இதை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அரசியல் கட்சி தொடங்கினால் செய்தியாளர்களை சந்திக்க வேண்டும் என்று ஏதாவது விதிமுறை இருக்கிறதா?.. இதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள்.. அப்படி ஒன்றும் அவசியம் இல்லை.. விஜய் கட்சி ஆரம்பித்ததில் இருந்து எனக்கு ஓட்டு போடுங்கள் என்று அவர் எங்கும் விளம்பரம் கொடுக்கவில்லை இதை பற்றி யாராவது பேசுகிறார்களா? என்று பேசியிருக்கிறார்..