ஜெ. உடல்நிலை: வதந்தியிலும் ஒரு வதந்தி!

புதன், 5 அக்டோபர் 2016 (11:03 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஏற்கனவே வந்த ஒரு வதந்தியில் மேலும் ஓர் வதந்தி வருகிறது.


 
 
முதல்வர் நலமாக இருக்கிறார் என அறிக்கைகள் தான் வருகின்றன. ஆனால் அவை நம்பும்படியாக இல்லை என கூறி முதல்வரின் புகைப்படத்தை வெளியிட வேண்டும் அல்லது முதல்வர் வாட்ஸ் ஆப்பில் பேச வேண்டும் என கோரிக்கைகள் வலுத்தன.
 
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல்வர் ஜெயலலிதாவின் குரல் என வாட்ஸ் ஆப்பில் ஒரு ஆடியோ வைரலாக பரவியது. நான் அம்மா பேசுகிறேன் என ஆரம்பிக்கும் அந்த ஆடியோ போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது.
 
முதல்வரின் குரல் மற்றும் அவரது பேசும் தொனியுடம் ஓரளவுக்குத்தான் ஒத்துப்போகும் அந்த ஆடியோவை கேட்டாலே அது முதல்வர் பேசியது இல்லை என்பது தெரிந்துவிடும். இந்த வீண் வதந்திகளை விஷமிகள் பரப்பி வருகின்றனர்.
 
இந்நிலையில் அந்த வாட்ஸ் ஆப் ஆடியோவில் இருப்பது முன்னாள் அமைச்சர் வளர்மதியின் குரல் என புதிய வதந்தி ஒன்று பரவி வருகிறது. இந்த வதந்திகளுக்கு என்றுமே முற்றுப்புள்ளி வைக்க முடியாது. எனவே மக்கள் யாருமே இது போன்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்