தூக்கம் வரவில்லை என்றால் மருத்துவரை பார்க்க வேண்டும்: நீதிபதி குறித்து ஆர்.எஸ்.பாரதி சூசகம்..!

வியாழன், 24 ஆகஸ்ட் 2023 (17:19 IST)
அமைச்சர்கள் பொன்முடி மற்றும் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர்களின் சொத்து வழக்கை தாமாக முன்வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை செய்வதாக கூறியிருந்த நிலையில் தூக்கம் வரவில்லை என்றால் என்ன நோய் என்று  மருத்துவரை தான் பார்க்க வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  
 
இது குறித்து ஆர் எஸ் பாரதி பேட்டி அளித்த போது மூன்று நாட்களாக தூக்கம் இல்லை தூக்கம் வரவில்லை என்றால் என்ன நோய் என்று மருத்துவரை பார்க்க வேண்டும் என்றும் பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தை நாடி திமுக வெற்றி பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார் 
 
திமுக அமைச்சர்கள் மீதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என்றும் நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். எனக்கு கூட தான் ஏழு நாட்களாக தூக்கம் வரவில்லை அதனால் என்ன செய்வது என்றும் ஆர்எஸ் பாரதி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்