சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குண்டு வெடிப்பு சம்பவம்: துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு

சனி, 25 ஜூலை 2015 (02:04 IST)
சென்னை சென்ரல் ரயில் நிலையத்தில், வெடிகுண்டு வெடிக்கச் செய்த சிமி பயங்கவாதிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ 40 லட்சம் பரிசு வழங்கப்படும் என என்.ஐ.ஏ.  அறிவித்துள்ளது.
 

 
சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கடந்த ஆண்டு மே மாதம் 1ஆம் தேதி ஒரு ரயிலின் இரண்டு பெட்டிகளில், பயங்கர சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்து சிதறியது. இதில், ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்த, இளம்பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பலியானார். பலர் படுகாயம் அடைந்தனர்.
 
இந்நிலையில், டெல்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும், என்.ஐ.ஏ. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:-
 
இந்தியாவில், தடை செய்யப்பட்ட சிமி அமைப்பைச் சேர்ந்த அம்ஜத்கான், காந்த்வா, ஜாகீர், சாலிக், ஷேக் மெக்பூப் ஆகிய 4 பேரும், மத்தியப் பிரதேச மாநில சிறையில் கைதிகளாக இருந்தனர்.
 
அவர்கள் சிறையில் இருந்து தப்பிச் சென்று, சென்னை ரயில் குண்டு வெடிப்பு மட்டும் இன்றி, உத்திர பிரதேசம் பிஜ்னோர் குண்டு வெடிப்பு மற்றும் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புனேவில் நடைபெற்ற பயங்கர குண்டு வெடிப்பு மற்றும் பெங்களூரு குண்டு வெடிப்பு மற்றும் ஆந்திர மாநிலம், கரீம் நகரில் நடந்த வங்கிக் கொள்ளை போன்ற பல்வேறு பயங்கரவாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
 

 
எனவே, இந்த 4 பேர் குறித்த தகவல் அளிக்கும் நபர்களுக்கு தலா, ரூ.10 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 40 லட்சம் பரிசு வழங்கப்படும். மேலும், அவர்கள் குறித்து, தகவல் கொடுப்படவர்கள் விபரம் மிக ரகசியமாக வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 
 

வெப்துனியாவைப் படிக்கவும்