கொடைக்கானல் வளர்ச்சிக்கு ரூ.3.41 கோடி - மத்திய சுற்றுலாத் துறை நிதியுதவி

புதன், 23 ஜூலை 2014 (17:57 IST)
கொடைக்கானல் வளர்ச்சி திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.4.27 கோடிக்கு ஒப்புதல் அளித்து ரூ.3.42 கோடியை வெளியிட்டது. 

 
மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு வழங்கப்படும் மத்திய அரசு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2008-09ஆம் ஆண்டில் இந்த நிதி வழங்கப்பட்டது. இந்த நிதி, சுற்றுலாத் தலங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சித் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்டது.
 
இதைத் தவிர கொடைக்கானலில் "ஹெலிபேட்" எனப்படும் சிறு விமானங்கள் இறங்கு தளம் அமைப்பதற்கோ அல்லது வேறு வளர்ச்சி திட்டங்களுக்கோ தமிழ்நாடு அரசிற்கு மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் எந்த நிதிக்கும் நடப்பு ஆண்டில் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் யேசோ நாயக், மக்களவையில் தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்