பாம்பை சமைத்து சாப்பிட முயன்றவருக்கு ரூ. 2000 அபராதம்

செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (10:40 IST)
இறந்து கிடந்த பாம்பை சமைத்து சாப்பிட முயன்றவருக்கு வனத்துறை அதிகாரிகள் ரூ. 2000 அபராதம் விதித்துள்ளனர்.
 

 
கோவை மாவட்டம், வால்பாறையிலுள்ள காந்தி நகரை சேர்ந்தவர் பாபு (52). இவர், அப்பகுதியில் உள்ள பாம்புகளை பிடித்து சமைத்து சாப்பிட்டு வருவபவர்.
 
இந்நிலையில், நேற்று ஏற்கனவே இறந்த நிலையில் கிடந்த பாம்பு ஒன்றை வீட்டுக்கு கொண்டு வந்து, சமையல் செய்து சாப்பிட தயார் நிலையில் வைத்துள்ளதாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அறிந்த, வால்பாறை வனச்சரக அலுவலர் சரவணன், வனவர் முனியாண்டி ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர், பாபுவின் வீட்டிற்கு சென்று, பாம்புக்கறியுடன் பாபுவை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
 
அவர் பாம்பை சமைத்து உண்டு வருவதை ஒத்தக்கொண்ட நிலையில், இறந்த நிலையில் கிடந்த பாம்பை சமைத்து சாப்பிட முற்பட்டதற்காக வனத்துறை அதிகாரிகள் அவருக்கு ரூபாய் 2,000 அபராதம் விதித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்