தீபாவளி சிறப்புப் பேருந்துகள் மூலம் இத்தனை கோடி வருமானமா?

வியாழன், 27 அக்டோபர் 2022 (18:14 IST)
சமீபத்தில் முடிந்த தீபாவளி திருநாளின்போது தமிழக அரசு போக்குவரத்து துறை சிறப்பு பேருந்துகளை இயக்கிய நிலையில் இந்த சிறப்பு பேருந்துகள் மூலம் சுமார் 10 கோடி ரூபாய் கூடுதல் வருமானம் தமிழக அரசின் போக்குவரத்து துறைக்கு கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தமிழக அரசு இதுகுறித்து வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16788 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்றும் இதன் மூலம் சுமார் 2.8 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு 9.5 கோடி ரூபாய் வருவாய் கிடைத்து விட்டதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி சிறப்பு பேருந்துகள் மூலம் தமிழக அரசுக்கு சுமார் 10 கோடி ரூபாய் வருமானம் கொடுத்துள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்