பேரறிவாளன் விடுதலையை மத்திய அரசு எதிர்ப்பது எதற்கு?: ஓய்வு பெற்ற டிஐஜி ராமசந்திரன்

புதன், 26 ஆகஸ்ட் 2015 (17:11 IST)
பேரறிவாளன் விடுதலையை மத்திய அரசு எதிர்ப்பது எதற்க்கு என்று தெரியவில்லையென்று ஓய்வு பெற்ற சிறைத் துறை டிஐஜி ராமசந்திரன் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் சிறைத் துறை விதிகளுக்கு உட்பட்டு பேரறிவாளனை விடுதலை செய்யலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பேரறிவாளன் இருந்த சிறையில் 10 வருடங்கள் சிறைத் துறை டிஐஜி யாக நான் இருந்ததகவும் , சமூகத்தில் வாழக்கூடிய ஒரு தேர்ந்த மனிதனாக பேரறிவாளன் இருப்பதாகவும். அவர் தெரிவித்துள்ளார். பேரறிவாளனை பற்றி மேலும் கேட்டபோது .மற்ற கைதிகள் போல் பேரறிவாளன் இருந்ததில்லையென்றும். நான் பார்த்ததில் இருந்து .அவர்  புத்தகங்களை அதிக நேரம் வாசிப்பார் என்றும், இதை விட்டால் எழுதிக்கொண்டு இருப்பார் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் குற்றவாளிகள் திருந்துவதற்க்கு 14 வருடங்கள் போதும் என்றும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

இவரின் விடுதலையை மத்திய அரசு எதிர்ப்பது எதற்கு என்று தெரியவில்லையென்றும், இவரின் விடுதலையை எதிர்ப்பது அரசியில் உள்நோக்கம் இருக்கலாம் எனவும் டிஐஜி ராமசந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்