அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது- மம்தா பானர்ஜி

வியாழன், 30 டிசம்பர் 2021 (20:03 IST)
மேற்கு வங்காளத்தில் அனைத்து இடங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என  முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்குவங்கம் மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி  நடந்து வருகிறது.

இந்தியாவில் ஏற்கனவே கொரொனா தொற்று பரவி வரும் நிலையில், தற்போது ஒமிக்ரான் தொற்று வேகமாகப் பரவி வருகிறது.  இதைத் தடுக்க மத்திய அரசு  மா நில அரசுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் மீண்டும் கொரொனா கட்டுப்பாடுகள் விதிக்க முடியாது என மேற்கு வங்க முதல்வர் தெரிவித்துள்ளார். அதில், கொரொனா கட்டுப்பாடுகள் விதித்தால் கடந்த 2 ஆண்டைப் போல பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும்.  அதனால் கொரோனா அதிகரிக்கும் இடங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள் விதிகப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்