எடப்பாடியார் ஒற்றைத் தலைமை??.. ஒதுங்கி வழிவிடுங்க ஓபிஎஸ்! – ஆர்.பி.உதயகுமார் கருத்து!

செவ்வாய், 21 ஜூன் 2022 (11:50 IST)
அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் வழிவிட வேண்டும் என ஆர்.பி.உதயக்குமார் கூறியுள்ளார்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்ட நிலையில் இருவரும் தனித்தனியாக தங்கள் ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.

நாளை மறுநாள் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற எடப்பாடியார் அணி உறுதியாக உள்ளது. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராக உள்ள நிலையில் அவர் அனுமதி இன்றி ஒற்றைத் தலைமை கொண்டு வர முடியாது என ஓபிஎஸ் தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு நடுவே ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமி பக்கம் திருப்பி வருவது அதிமுகவில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்த ஒற்றைத் தலைமை விவகாரம் குறித்து பேசிய ஆர்.பி.உதயகுமார் “பெருவாரியான மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், எம்.எல்.ஏக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவே உள்ளனர். கட்சியை திறம்பட கொண்டு செல்பவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படி முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமிக்கு ஓபிஎஸ் விட்டுக் கொடுத்தாரோ, அதுபோல ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் ஒதுங்கி வழிவிட வேண்டும். அனைவரும் கட்சியின் வளர்ச்சிக்காகவே பாடுபடுகிறோம்” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்