ஜெயலலிதாவை சந்திக்க அப்பல்லோ சென்ற ரவி பச்சமுத்து, சிவக்குமார்

வியாழன், 13 அக்டோபர் 2016 (15:21 IST)
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க ரவி பச்சமுத்து, மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோர் அப்பல்லோ சென்றனர்.
 

 
கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 3 வாரங்களாக அங்கேயே தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
 
இதற்கிடையில், தமிழக அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் ஆகியோர் சந்திக்க முயற்சித்து வருகின்றனர். ஆனால், யாரையும் மருத்துவமனை நிர்வாகம் சந்திக்க அனுமதிக்கவில்லை.
 
இதற்கிடையில், ராகுல் காந்தி, வைகோ, முக.ஸ்டாலின், திருமாவளவன், பொன்.ராதாகிருஷ்ணன், முத்தரசன், வேல்முருகன், தா.பாண்டியன், சீமான், தென்னிந்திய திரைப்பட சங்க தலைவர் நாசர் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்கச் சென்று திரும்பி வந்தனர்.
 
இந்நிலையில், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக துணைவேந்தர் பச்சமுத்துவின் மகன் ரவி பச்சமுத்து மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோர் அப்பல்லோ சென்றனர். அங்கு மருத்துவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்துவிட்டு திரும்பினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்