மாணவியை கடத்தி 3 மாதங்கள் தொடர்ந்து கற்பழித்த சித்தப்பா

புதன், 20 ஆகஸ்ட் 2014 (18:51 IST)
குமரி மாவட்டம் தடிக்காரன்கோணம் பகுதியை சேர்ந்த பிளஸ்–2 மாணவி ஒருவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.
 
கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி விட்டு விடுமுறையில் இருந்த மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தாயார் இது குறித்து கீரிப்பாறை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
 
இதில், மாணவி அவரது சித்தப்பா (மாணவியின் தாயாரின் தங்கை கணவர்) முருகன் (28) என்பவருடன் சென்றிருப்பது தெரிய வந்தது.
 
இந்தநிலையில் நேற்று முன் தினம் மாணவியுடன் முருகன் ஊருக்கு திரும்பினார். உறவு முறையில் மகளை கடத்தி சென்ற முருகனை கண்டதும் அவரது குடும்பத்தினர் ஆவேசமடைந்தனர். அப்போது மாணவி மிகவும் சோர்வுடன் காணப்பட்டார். உறவினர்கள் அவரிடம் விசாரித்த போது, முருகன் மாணவியை ஆசை வார்த்தைகள் கூறி கேரளா அழைத்து சென்றதாக கூறினார்.
 
பால்வெட்டும் தொழிலாளியான முருகன் கேரளாவில் ஒரு ரப்பர் எஸ்டேட்டில் 3½ மாதம் அடைத்து வைத்து மாணவியை பலாத்காரம் செய்தாராம். இதனால் கர்ப்பமடைந்ததிருப்பதாக கூறி மாணவி கண்ணீர் விட்டு அழுதார்.
 
இதைக்கேட்ட குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். மாணவியை இந்த நிலைக்கு ஆளாக்கிய முருகனை ஏற்றுக் கொள்ள அவரது மனைவி மறுத்து விட்டார். மேலும், முருகன் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மாணவியின் தாயார் கீரிப்பாறை காவல்துறையில் புகார் செய்தார்.
 
முருகன் மீது கீரிப்பாறை காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் 366(ஏ)–மைனர் பெண்ணை கடத்துதல், 376 கற்பழிப்பு ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். ஆய்வாளர் கஜேந்திரன், துணை ஆய்வாளர் தாமோதரன் ஆகியோர் விசாரணை நடத்தி முருகனை கைது செய்தனர்.
 
பின்னர் முருகன் மற்றும் மாணவியை காவல்துறையினர் பூதப்பாண்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அதன்பின்னர் முருகன் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். மாணவி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.
 
நீதிமன்ற உத்தரவுப்படி இன்று இருவரையும் ஆசாரி பள்ளம் மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்கு காவல்துறையினர் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்