ராம்குமாருக்கு ரத்த பரிசோதனை

சனி, 30 ஜூலை 2016 (14:56 IST)
சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் இன்று ரத்த பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.


 

 
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
 
இந்த வழக்கில் கூடுதல் ஆதாரம் திரட்ட காவல் துறையினர், சென்னை பெருநகர குற்றவியல் 13வது நடுவர்மன்ற நீதிபதி கோபிநாத் முன்னிலையில் அனுமதி பெற்று ராம்குமாரை ரத்த பரிசோதனை செய்ய ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
 
அங்கு மருத்துவர்கள் ராம்குமாரின் ரத்தத்தை பரிசோதனைக்காக சேகரித்து கொண்டனர். பின்னர் மீண்டும் ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்