ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் தொடர் தாக்குதல்: இதில் ஒருவருக்கு மண்டை உடைந்தது

ஞாயிறு, 22 நவம்பர் 2015 (16:52 IST)
கச்சத்தீவு மற்றும் பாக் ஜலசந்தி கடல் பகுதியில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டி அடித்தது மட்டுமின்றி மீனவர்கள் சிலரை தாக்கி மண்டை உடைத்து உள்ளனர். இதனால் மீனவர்கள் இடையே இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
ராமேஸ்வரம் பகுதியிலிருந்து நேற்று 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் 30 க்கும் மேற்பட்ட படகுகளில் கச்சத்தீவு, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் கடும் மழை மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள புயல் ஆகியவற்றிற்கு இடையே மீன்பிடிக்க சென்றனர்.
 
இந்நிலையில் கச்சத்தீவு கடல்  பகுதி அருகே  மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது இன்று அதிகாலை 2 மணியளவில் அப்பகுதிக்கு ரோந்து கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர்  வந்தனர். அப்போது ராமேஸ்வரம் மீனவர்களை அக்கப்பலில் இருந்து 10க்கும் மேற்பட்ட வாட்டர் ஸ்கூட்டரில் கடலில் இறங்கிய இலங்கை கடற்படையினர் இரும்பு கம்பி , அலுமினிய மிதவை குண்டுகள் மற்றும் கற்களை வீசி தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில்  மீனவர் வர்க்கீஸ் என்பவரது மண்டை உடைந்து இரத்தம் சோட்ட சோட்ட கடற்கரைக்கு வந்தார்.


 


தற்போது இவர் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இந்ததக்குதல் குறித்து இவர் கூறுகையில் "நாங்கள் கடல் பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருக்கும் போது வாட்டர் ஸ்கூட்டரில் இறங்கி வந்த இலங்கை  கடற்படையினர் எங்கள் மீது கற்கள், இரும்பு குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர், எங்கள் வலைகளையும் வெட்டி கடலில் வீசினர். அப்போது. இரும்பு குண்டு பட்டு எனக்கு மண்டையில் காயம் ஏற்பட்டது’ என்று அவர் தெரிவித்தார் 
 

வெப்துனியாவைப் படிக்கவும்