சிந்துபாத் கதையை மிஞ்சும் ராமஜெயம் கொலை வழக்கு

வியாழன், 2 ஜூன் 2016 (07:42 IST)
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு மீண்டும் இரண்டு வாரத்திற்கு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
 

 
கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் தேதி, திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம்  மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
 
இந்த கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க திருச்சி போலீசார் முண்டாசு கட்டியும் முடியவில்லை.  இந்த வழக்கு சிபிசிஐடி வசம் மாறியும் கொலையாளிகளை நெருங்க கூட முடியாமல் சிபிசிஐடி போலீஸ் தடுமாறி வருகிறது. இதற்கு நீதி மன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், சிபிஐ விசாரிக்கு உத்தரவிடக் கோரி ராமஜெயம் மனைவி லதா நீதிமன்றத்தில் முறையிட்டார்.
 
இந்த நிலையில், ராமஜெயம் படுகொலை செய்யப்பட்டு 4 ஆண்டுகள் தாண்டிய நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 
அப்போது, டி.எஸ்.பி. மலைச்சாமி நேரில் ஆஜராகி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார். இதனையடுத்து, இந்த வழக்கு மீதான விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதி தேவதாஸ் உத்தரவிட்டார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்