ஐநா மூலம் "பொதுவாக்கெடுப்பு" நடத்த ராமதாஸ் கோரிக்கை

செவ்வாய், 14 ஜூன் 2016 (08:33 IST)
ஐநா மூலம் ஈழத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என ராமதாஸ் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
 

 
இது குறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த 2009 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்து.
 
இந்த இனப் படுகொலை நடத்திய இலங்கை மீது ஐநா மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது. ஆனால், இதில் எந்த தமிழர்களுக்கு எந்த நன்மையும் நக்கவில்லை. விசாரணையில் முன்னேற்றமும் நடக்கவில்லை.
 
மேலும், தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு ஈழத் தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி வருகிறது.
 
எனவே, செப்டம்பர் 29 ஆம் தேதி தொடங்க உள்ள ஐநா மனித உரிமை கூட்டத்தில், இலங்கை மீது இந்தியா கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கான தீர்மானத்தை இந்தியா கொண்டு வர வேண்டும்
 
ஐநா மூலம் ஈழத் தமிழர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்