ராம் மோகன் ராவுக்கு வைக்கப்பட்ட செக் - காரணம் இதுதான்?

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2017 (10:10 IST)
முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் இன்று ஓய்வு பெறுவதற்கு காரணம் தெரியவந்துள்ளது.


 

 
கடந்த டிசம்பர் மாதம் 12ம் தேதி, முன்னாள் தலைமை செயலாளர் ராம் மோகன் ராவ் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் இவருக்கும், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது.   
 
அதனால், அவரின் பதவி பறிக்கப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதில் கிரிஜா வைத்தியநாதன் புதிய தலைமை செயலாளராகப் பதவியேற்றார். அந்நிலையில், அவருக்கு மீண்டும் உயர் பதவி அளிக்கப்பட்டு, தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனராக அவர் நியமிக்கப்பட அவர், இன்று அவரது பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார். 
 
பொதுவாக தலைமை செயலாளர் பதவியிலிருந்த ஒருவரை அவ்வளவு சீக்கிரமாக முதல்வர் ஓய்வு பெற விடமாட்டார். அவருக்கு தலைமை செயலகத்தில் வேறு ஏதேனும் பதவி கொடுத்த நீட்டிக்கவே செய்வார். இது, ஜெயலலிதா ஆட்சியிலிருந்த போதும் நடந்திருக்கிறது.
 
ஆனால், ராம் மோகன் ராவுக்கு தமிழக அரசு ஓய்வு அறிவித்ததன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. அதாவது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 22.9.16 இரவு 10 மணியளவில் சுய நினைவு இல்லாத நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது, மருத்துவமனை பதிவேட்டில் இரத்த தொடர்புடைய உறவினர்கள் கையெழுத்து போடவில்லை. சசிகலாவும் போடவில்லை. தலைமைச் செயலாளர் ராம்மோகன ராவ் IAS கையெழுத்து போட்டார்.
 
தற்போது ஜெ.வின் விவகாரம் பூதாகரம் ஆகியுள்ளதால், அவசர அவசரமாக அவருக்கு ஓய்வு அறிவித்துவிட்டனர் என செய்திகள் வெளிவந்துள்ளது.
அடுத்த கட்டுரையில்