பத்திரிக்கையாளர்களுடன் ஆலோசனை ; ரஜினியின் அடுத்த மூவ்

சனி, 27 மே 2017 (13:43 IST)
அரசியலுக்கு வருவது பற்றி நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்து வருகிறார்.


 

 
கடந்த 15ம் தேதி முதல் 19ம் தேதி, சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிகளில் தற்காலிக அரசியல் பற்றியெல்லாம் பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார். தமிழகத்தில் நல்ல தலைவர்கள் இல்லை, சிஷ்டம் இல்லை. போர் வரும் போது நாம் பார்த்துக்கொள்வோம் எனக்கூறி ரசிகர்களை ஆர்ப்பரிக்க வைத்தார்.  
அவரின் பேச்சு விரைவில் அவர் அரசியலுக்கு வருவார் என்பதையே காட்டியது. அவர் அரசியலுக்கு வருவதை சில தலைவர்கள் ஆதரித்தும், சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 
 
வருகிற ஜூலை மாதம் தனது அரசியல் பிரவேசம் பற்றிய அறிவிப்புகளை ரஜினிகாந்த் வெளியிடுவார் என அவரது சகோதரர் சத்யநாரயணா உறுதி செய்துள்ளார்.
 
இந்நிலையில், தற்போதைய அரசியல் சூழ்நிலை குறித்து தனக்கு நெருக்கமான பல பத்திரிக்கையாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை செய்து வருகிறார். நக்கீரன் கோபால் உள்ளிட்ட பல மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் எடிட்டர்களை வீட்டிற்கே வரவழைத்து அவர் விவாதித்து வருகிறார். 

வெப்துனியாவைப் படிக்கவும்