மூளைச்சாவு அடைந்த சிறுவனின் கடைசி ஆசைக்கு உதவிய ரஜினிகாந்த்

Webdunia
வியாழன், 6 செப்டம்பர் 2018 (07:47 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னை குன்றத்தூர் அபிராமியின் கணவர் விஜய்க்கு ஆறுதல் கூறினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அதேபோல் 'காலா' இசை வெளியீட்டு விழாவிற்கு வந்த ரசிகர் ஒருவரின் இரண்டு கால்களும் விபத்தில் துண்டானது. அந்த ரசிகரையும் நேரில் அழைத்து அவருக்கு ஆறுதல் கூறினார்.

இந்த நிலையில் கன்னியாகுமரியை சேர்ந்த ஒரு சிறுவனின் கடைசி ஆசை நிறைவேறவும் நேற்று ரஜினி உதவியுள்ளார். கன்னியாகுமரியை சேர்ந்த அவினாஷ் என்ற சிறுவன் தீவிர ரஜினி ரசிகர். இந்த சிறுவன் தனது கையால் வரைந்த ஓவியம் ஒன்றை ரஜினியிடம் காண்பித்து அவரிடம் அந்த ஓவியத்தில் கையெழுத்து வாங்க ஆசைப்பட்டான்.

ஆனால் அதற்கு முன்னர் அவினாஷ் மூளைச்சாவு அடைந்தான். அதன்பின்னர் அந்த சிறுவனின் பெற்றோர்கள் அவினாஷின் உடல் உறுப்புகளை தானமாக அளித்தனர். இந்த நிலையில் இறப்புக்கு முன் சிறுவனின் ஆசை குறித்து ரஜினியிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அவினாஷின் குடும்பத்தை சென்னைக்கு வரவழைத்த ரஜினிகாந்த், இறந்த சிறுவனின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் சிறுவன் வரைந்த ஓவியத்தில் கையெழுத்திட்டு கொடுத்தார். மேலும் அந்த சிறுவனின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த சந்திப்பு மிகவும் நெகிழ்ச்சி நிறைந்ததாக இருந்ததாக அவினாஷின் பெற்றோர் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்