சூப்பர் ரஜினிகாந்த் இப்படியா? பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பட்..படார்...

வியாழன், 2 ஜூன் 2016 (06:53 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே தெரிவித்துள்ள கருத்து திரையுலகில் கலக்கி வருகிறது.
 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் கபாலி. இதில் அவருக்கு ஜோடியாக நடித்து வருபவர் பிரபல பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே.
 
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில்,  ப.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிறது.
 
இப்படத்தின் அனைத்து பணிகளும் பூர்த்தியடைந்துள்ள  நிலையில், இதன் ஆடியோ வெளியீட்டு விழா வரும் 10 ஆம் தேதி சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், நடிகை ராதிகா ஆப்தே பிரபல பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், கபாலி படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது.
 
திரையுலகின் புகழ் உச்சியில் அவர் இருந்தாலும், அதைப் பற்றி அவர்  கவலைப்படாமல் எல்லோரிடமும் சமமாக பழக கூடியவர். அவர் ஒரு உன்னதமான மனிதர். அனைவரின் அன்பு, பண்பு,   பாசம் என்னை நெகிழ வைத்துள்ளது என்று கருத்து தெரிவித்துள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்