ரஜினியின் மகள் சௌந்தர்யாவின் காதல் கதை!

சனி, 17 செப்டம்பர் 2016 (15:36 IST)
நடிகர் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவின் விவாகரத்து செய்தி தான் தற்போது பரவலாக பேசப்படுகிறது. இந்த விவாகரத்துக்கு பல்வேறு காரணங்கள் யூகத்தின் அடிப்படையில் பரப்பப்படுகிறது.


 
 
2010-இல் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்ட சௌந்தர்யா, அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் காதல் விவகாரத்தை ஒருமுறை பேட்டி ஒன்றில் சௌந்தர்யா கூறியிருந்தார்.
 
அதில், நான் அஸ்வினை ஜிம்மில் தான் சந்தித்தேன். பார்க்கும்போதெல்லாம் சிரித்துக்கொள்வது ஒருவரையொருவர் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொள்வது என நகர்ந்த எங்களது பழக்கம் ஒருநாள் முன்னேற்றம் அடைந்தது.
 
நேருக்கு நேர் நடந்துவந்து ஒருவரையொருவர் கடந்து சென்ற பின்பு, அஸ்வின் திரும்பி அழைத்தார். நான் திரும்பியதும், ரஜினி மகள் தானே நீங்கள்? நான் அவரது மிகப்பெரிய ரசிகன் என்று கூறினார். எனக்கு கோபமாக வந்தது. அதன் பிறகு ஐந்து ஆண்டுகள் சந்திக்காமல், நண்பரின் விழாவில் சந்தித்தோம். அப்போதுதான் எல்லாம் தொடங்கியது.
 
என்னை மீண்டும் அன்று பேசிய அதே இடத்துக்கு அழைத்துச்சென்று ப்ரபோஸ் செய்தார். நான் இம்ப்ரெஸ் ஆகிவிட்டேன். அஸ்வின் எனக்கு அணிவித்த மோதிரம் என் அப்பாவின் சம்மதத்துடன் கொடுக்கப்பட்டது என்று அஸ்வின் சொன்னார்.
 
அப்போதுதான் எனக்குத் தெரியும் அக்கா, அப்பாவிடம் அனைத்தையும் சொல்லி, அஸ்வினை அப்பா முன்பு கொண்டுபோய் நிறுத்தியது தெரியும். அப்பாவிடம் பேசி சம்மதம் வாங்கிய பிறகுதான் என்னிடம் பேசினார் அஸ்வின்.
 
அப்பா ஈஸியாக ஒப்புக்கொண்டாலும், அஸ்வின் என் குடும்பத்துடன் செட் ஆகவில்லை. திருமணத்துக்குப் பிறகு மூன்று வருடங்கள் ஆகிவிட்ட போதும்கூட பல விஷயங்களில் அட்ஜஸ்ட் செய்துகொண்டு தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றார் சௌந்தர்யா. இந்த திருமண வாழ்க்கை 6 வருடத்திற்கு பின்னர் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்