குடையுடன் வெளியே போங்க.. இன்று காலை 10 மணி வரை 9 மாவட்டங்களில் இடியுடன் மழை..!

Siva

செவ்வாய், 27 மே 2025 (08:04 IST)
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில், அதன் தாக்கம் தமிழகத்தில் உள்ளது என்பதும், தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.
 
அந்த வகையில், இன்று காலை 10 மணி வரை, தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
இன்று காலை 10 மணி வரை, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
 
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
நேற்று, நீலகிரி மாவட்டத்தில்  3வது நாளாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக  அவலாஞ்சியில் அதிகபட்சமாக 25.6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அதேபோல் எமரால்ட் -13.2 செ.மீ., குந்தா-11 செ.மீ., சேரங்கோடு-10 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மேலும் செருமுள்ளி, பந்தலூர் பாலகொலா, பாடந்தொரை, நடுவட்டம் பகுதிகளில் 7 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பதிவாகியுள்ளது. 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்