குளுகுளுவென மாறிய சென்னை.. மீண்டும் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி..!

Mahendran

செவ்வாய், 6 ஆகஸ்ட் 2024 (19:58 IST)
சென்னையில் தற்போது முக்கிய பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதை அடுத்து சென்னை நகரமே குளு குளு என மாறி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வளிமண்டல சுழற்சி காரணமாகவும் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாகவும் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்றைய சென்னை உள்பட ஒன்பது மாவட்டங்களில் மழை பெய்யும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் சற்றுமுன் சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை அடையாறு, கோட்டூர்புரம், கிண்டி, தாம்பரம், சேலையூர், செம்மஞ்சேரி, சித்தலப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

அதேபோல் சென்னை நகரின் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, நந்தனம், தியாகராய நகர், பாண்டி பஜார், ஆழ்வார்பேட்டை , அண்ணா சாலை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குளிர்ந்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருவதை அடுத்து சென்னை நகரமே குளிர்ச்சியாக மாறி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்