மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய நாளை தமிழகம் வருகிறது மத்திய குழு

புதன், 25 நவம்பர் 2015 (10:07 IST)
தமிழகத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய, மத்திய உள்துறை இணை செயலாளர் தலைமையிலான மத்திய குழு நாளை தமிழகத்திற்கு வருகின்றது.

 


 
மத்திய உள்துறை இணை செயலாளர் டி.வி.எஸ்.என் பிரசாத் தலைமையிலான அந்த குழுவில், சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 9 பேர் பேர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழு இரண்டு பிரிவுகளாக பிரிந்து ஆய்வு நடத்தும் என்று கூறப்படுகின்றது.
 
இந்த மத்திய குழு, கனமழை காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களை ஆய்வு செய்யவுள்ளது.
 
தமிழக அரசு அதிகாரிகளுடன் அந்த குழு, வெள்ள சேதங்கள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளது. இந்த குழு பரிந்துரைக்கும் மதிப்பீட்டின் அடிப்படையில், தமிழகத்திற்கு வழங்ககும் நிவாரண உதவி குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்.
 
கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீரமைக்க 8 ஆயிரத்து 481 கோடி ரூபாய் தேவை என்றும், பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவை அனுப்ப வேண்டும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்திருந்தார் என்பதுகுறிபிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்