மழை சேதம் முன்னேற்பாடுகளை அரசு ஏன் செய்யவில்லை? தமிழிசை ஆவேச கேள்வி

புதன், 11 நவம்பர் 2015 (00:55 IST)
தீபாவளிக்கு டாஸ்மார்க் இவ்வளவு கோடிக்கு விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கும் அரசு. வரப்போகும் வடகிழக்கு பருவ மழை தாக்கினால் முன் ஏற்பாடுகள் என்ன செய்தது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

 
இது குறித்து,  தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
 
கொட்டித்தீர்த்த அடை மழைக்கும் நடுவே நம் பாஜக நண்பர்களின் பாச மழை.அடாத மழைக்கும் அஞ்சாமல் கட்சி அலுவலகத்திற்கும் என் இல்லம் தேடியும் வந்து தீபாவளி வாழ்த்தும் அன்பையும் பகிர்ந்து கொண்டது பீகார் நிகழ்வுகள் தந்த வலியை போக்கும் வேளையில் கடலூர் விழுப்புரம் மாவட்ட மக்களின் வெள்ளச் சேதமும் துயரமும் சேர்ந்தது.
 
சிங்காரச் சென்னை மழையால் சீரழிந்த காட்சி கண் முன்னால், மிரட்டும் மழை கால நோய்கள், ஏற்கனவே குடிகொண்ட டெங்குவை விரட்டும் பணியுடன் மழை காரணமாக புனரமைப்பும் போர்க்கால அடிப்படையில் தேவை. மக்கள் துயரங்கள் விரைவில் கலையப்படவேண்டும்.
 
என் உள் மனது கேட்கிறது. தீபாவளிக்கு டாஸ்மார்க் இவ்வளவு கோடிக்கு விற்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கும் அரசு. வரப்போகும் வடகிழக்கு பருவ மழை தாக்கினால் முன் ஏற்பாடுகள் என்ன செய்தது. தானே புயல் தாக்கிய கடலூரில் மீண்டும் புயல் பாதிப்பு. பொதுமக்களுக்கு மீண்டும் துயரம். மக்கள் துயர் துடைக்க அரசு முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்