தமிழகத்தில் கனமழை நீடிக்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

செவ்வாய், 21 அக்டோபர் 2014 (10:54 IST)
சில தினங்களாகவே மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ள தொடர் மழை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 தினங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தமிழகம் மற்றும் இலங்கை பகுதிகளுக்கு இடையே நிலை கொண்டுள்ளது. மேலும், தென்மேற்கு வங்ககக் கடலில் புதியதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் கனமழை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக நெல்லை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு அக், 21 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்