தொழிற்சாலையில் அதிகாரிகள் ரைடு...தி.மு.க வினர் தடுத்ததால் பெரும் பரபரப்பு

திங்கள், 11 நவம்பர் 2019 (21:07 IST)
மு.க மாவட்ட செயலாளரின் உதவியாளரின் கொசுவலை உற்பத்தி தொழிற்சாலையில் தர நிர்ணய அதிகாரிகள் ரைடு – தி.மு.க வினர் வேலை செய்ய விடாமல் தடுத்ததால் பெரும் பரபரப்பு – போலீஸ் உதவியுடன் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மாஜி அமைச்சரும், தி.மு.க மாவட்ட பொறுப்பாளருமான வி.செந்தில்பாலாஜியின் உதவியாளர் சுப்பிரமணி என்பவரது வீடு, கரூர் அடுத்த மூர்த்திப்பாளையம் பகுதியில் உள்ளது. அதே பகுதியில் ராசாயண கலவை கலந்த கொசுவலை தொழிற்சாலை ஒன்றிணையும் நடத்தி வருகின்றார்.

மாஜியின் உதவியாளர் நடத்தி வரும் இந்த கொசுவலை தொழிற்சாலையை அவரது அண்ணன் ராசப்பன் என்பவர் பெயரில் நடத்தி வரும் நிலையில்., இந்த கொசுவலை அரசு அனுமதி பெற்றுள்ளதா ? என்றும், தரச்சான்றுகள் குறித்தும், கொசுவலையில் தயாரிக்கப்படும் நூலின் தரத்தினை ஆய்வு செய்து சுங்க வரித்துறையினர் மற்றும் குவாலிட்டி கண்ட்ரோல் ஆபீசர் ஆகியோர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும், இந்த அதிரடி ரைடினால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதோடு, தரம் வாய்ந்தவை இல்லை என்றால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தி.மு.க மாவட்ட பொறுப்பாளர் என்பதினால், தி.மு.க நிர்வாகிகள் உடனே, அங்கு சென்று ஆய்வு நடத்திய அதிகாரிகளுடன் காரசார விவாதங்கள் நடத்தியதோடு, அந்த ஆய்வினை நடத்த விடாமல் தடுத்தனர். இதனையடுத்து போலீஸார் குவிக்கப்பட்ட நிலையில், போலீஸாரின் பாதுகாப்புடன் ரைடு நடைபெற்று வருகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்