உலகிலேயே அவர்தான் அறிவாளி என நினைப்பவர் ஜெயலலிதா: ராகுல் காந்தி

சனி, 7 மே 2016 (19:28 IST)
உலகிலேயே அவர்தான் அறிவாளி என நினைப்பவர் ஜெயலலிதா, அதனால் தான் மக்களை நேரில் சென்று பார்ப்பதில்லை என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் கூறினார்.


 
 
தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழகம் வந்துள்ள ராகுல் காந்தி, ஸ்டாலினுடன் சேர்ந்து மதுரை மேனேந்தல் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். இருவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்தனர்.
 
பிரச்சாரத்தில் ராகுல் காந்தி கூறியதாவது:-
 
அதிமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக தான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம், உலகிலேயே அவர்தான் அறிவாளி என நினைப்பவர் ஜெயலலிதா, அதனால் தான் அவர் யாரையும் சந்திப்பதில்லை.
 
மற்ற மாநிலங்கள் வியக்கும் அளவிற்கு தமிழகத்தில் வளர்ச்சியை ஏற்படுத்துவோம், 60 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும், விவசாய கடன் ரத்து செய்யப்படும், புதிய தொழிற்சாலைகள் கொண்டு வரப்படும். பூரண மதுவிலக்கை அமல்படுத்துவோம், போன்றவற்றை எடுத்துரைத்தார்.
 
பிரச்சார பொதுக் கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திருநாவுக்கரசர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்