கமல் & ராமதாஸ் கூட்டணி, ரஜினி கட்சி… – ராதாரவி நக்கல் பேச்சு !

Webdunia
வெள்ளி, 1 மார்ச் 2019 (15:24 IST)
பாமக நடிகர் கமலுடன் கூட்டணி அமைத்திருந்தால் அவர்களுக்குக் கமல் 10 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கித் தந்திருப்பார்கள் என திமுக பேச்சாளர் ராதாரவிக் கூறியுள்ளார்.

நடிகர் ராதாரவி விறுவிறுப்பாகப் படங்களில் நடிப்பது ஒருப் பக்கம் என்றால் திமுக மேடைகளில் அரங்குக் குலுங்க பேசுவது ஒருப்பக்கம் எனப் பரபரப்பாக இருந்துவருகிறார். விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருக்கும் வேளையில் திமுக பேச்சாளராக தனது அரசியல் பணிகளை மேற்கொள்ளும் முனைப்பில் இருக்கிறார்.

தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக தலைமையில் இருப் பலமான அணிகள் அமைந்துள்ள நிலையில் கட்சிகளின் கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை அவர் கூறியுள்ளார். சமீபத்தில் அவர் இணையதளம் ஒன்றிற்கு அளித்தப் பேட்டியில் ‘அதிமுக, பாஜகவோடுதான் கூட்டணி அமைக்கும் என எல்லோரும் எதிர்பார்த்தார்கள். அதனால் அவர்கள் கூட்டணி உறுதியானதில் எந்த வியப்பும் இல்லை. ஆனால் பாமக அதிமுகவோடு கூட்டணி வைத்ததுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பாஜகவைப் பற்றியும் அதிமுகவைப் பற்றியும் பாமக தொடர்ந்து விமர்சித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் அதிமுக அரசின் ஊழல்களை விமர்சித்துப் புத்தகமே போட்டது. ஆனால் கடைசியில் சீட்டுக்கு ஆசைப்பட்டு அதிமுகக் கூட்டணியில் சேர்ந்து விட்டது. ராமதாஸ் கமல் கட்சியோடுக் கூட்டணி வைத்திருக்க வேண்டும். அவர் பாமகவிற்கு 10 சீட்டுகளுக்கு மேல் கொடுத்திருப்பார். நல்ல வேளையாக ரஜினி இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. ஆரம்பித்திருந்தால் இங்கே இருக்கும் கோடிக்கணக்கான கட்சியில் அவரது கட்சியும் ஒன்றாக மாறியிருக்கும்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் அதிமுக அமைத்துள்ளக் கூட்டணி மெகாக் கூட்டணி என்று சொல்லப்படுகிறதே என்றக் கேள்விக்கு ‘ இதுவரை மெகாக் கூட்டணி என்று சொன்னவர்கள் எல்லாம் தோற்றுதான் போயிருக்கிறார்கள்’ எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்