மே 16 ஆம் தேதி புதுச்சேரி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டனர். மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களையும், திமுக 2 இடத்திலும் வெற்றி பெற்றது. இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அங்கு அமைய உள்ளது.
இதனையடுத்து, புதுச்சேரி முதல்வராக, முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை இன்று காலை நேரில் சந்தித்து நாராயணசாமி ஆசி பெற்றார். மேலும், திமுக ஆதரவு கடிதத்தையையும் பெற்றார். அப்போது திமுக எம்பி கனிமொழி உடனிருந்தார்.
பின்பு, நாராயணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக, மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவோம்.