இதையடுத்து புகழ்பெற்ற புதுச்சேரி கடற்கரை சாலைக்கு சீல் வைக்கபட்டது. மறு அறிவிப்பு வரை புதுச்சேரி கடற்கரைக்கு பொது மக்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுளது. ஏற்கனவே புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் புதுவை மாநில அரசு புயலின் தாக்கத்தை எதிர்கொள்ள அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது
புதுவையின் காரைக்கால் பகுதியில் தான் புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், காரைக்கால் முழுவதும் மீட்புப்படையினர் கட்டுப்பாட்டில் தற்போது உள்ளது. புயலால் ஏற்படும் இயற்கை சேதங்களை எதிர்கொள்ள பேரிடை படையினர் மற்றும் மீட்புப்படையினர் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது