புதுச்சேரியில் ஆக.31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு'

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (20:40 IST)
புதுவையிலும் ஆகஸ்டு 31 வரை பொது முடக்கம் நீடிப்பு என முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில் ஆறாம் கட்ட ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது 
 
இதனை அடுத்து தமிழகம் உள்பட பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கும் என்று அறிவித்தார். அதே நேரத்தில் சில தளர்வுகளையும் அவர் அறிவித்துள்ளார் இருப்பினும் தியேட்டர் மால்கள் உள்ளிட்ட ஒருசிலவற்றை திறக்க அவர் தடை விதித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஆகஸ்ட் 31 வரை பொதுமுடக்கம் நீடிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சற்றுமுன் இதுகுறித்த அறிவிப்பை வெளியிட்ட அம்மாநில முதல்வர் நாராயணசாமி ’புதுச்சேரியில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் நீடிக்கவுள்ளதாகவும் இருப்பினும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதி உண்டு என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தை போலவே புதுவையிலும் பொதுமுடக்கம் நீடித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்