வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

சனி, 6 மார்ச் 2021 (12:15 IST)
வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக ராமநாதபுரத்தில் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடந்துவருகிறது.

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வன்னியர் சமுதாயத்திற்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்க மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா தற்காலிகமானது என்றும் சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்ட பிறகு விரிவான மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கூறப்பட்டது.

அரசின் இந்த உள்ஒதுக்கீடுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்நாட்டு மக்கள் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று ராமநாதபுரத்தில் அனைத்து மறவர் அமைப்பினர் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அரசியல் களத்தில் மேலும் பரபரப்பு அதிகமாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்