காதலர் தினம்: நாய்களுக்கு திருமணம்: வாழ்த்து அட்டைகளுக்கு செருப்பு அடி

ஞாயிறு, 14 பிப்ரவரி 2016 (11:01 IST)
காதலர் தினத்தை தடை செய்ய கோரி திருப்பூரில் இந்து முன்னனி சார்பில் நாய்களுக்கு திருமணம் நடத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 
 
வருடம் தோறும் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்திய முழுவதும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடுவதும், நாய்களுக்கும், கழுதைகளுக்கும் திருமணம் செய்து வைத்து காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பார்கள். இதேபோல், இந்த வருடமும் இந்து முன்னனி சார்பில் திருப்பூரில் நாய்களுக்கு அலங்காரங்கள் செய்து வந்து திருமணம் செய்து வைக்கப்பட்டது.

நாய்களுக்கு மோதிரம் மற்றும் மாலை அணிவித்து திருமணம் செய்து வைத்தனர். தமிழகத்தில் காதலர் தினத்தை தடை செய்ய கோரி இந்து முன்னனி அமைப்பினர் கோஷங்களையும் எழுப்பினர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதால் 50க்கும் மேற்பட்டவர் கைது செய்யப்பட்டனர்
 
மேலும், காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்து முன்னனி சார்பில் வாழ்த்து அட்டைகளை செருப்பால் அடித்தும், கிழித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால் இந்து முண்ணனி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

பொது இடங்களில் கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் வகையில் காதலர்கள் நடந்து கொள்வதாகவும், இதனை தடுக்க தமிழக காவல் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
 
காதலர் தினத்தை தடை செய்ய வேண்டும் என்று சென்னை மண்ணடி பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் பொது மக்களுக்கு துண்டு பிரச்சுரத்தில் ஈடுபட்டனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்