நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ச்சியாக சமூக வலைதளங்களிலும் குரல் கொடுத்து வரும் திரைப்பட நடிகர் சூர்யாவை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே திடீரென ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஒரு சிலர் மறைவாக நின்று நடிகர் சூர்யாவின் புகைப்படம் பொருத்திய உருவபொம்மையை தீ வைத்து கோசங்களை முழங்க ஆரம்பித்தனர்.