மதுவிலக்கு விவகாரம்: தமிழக அரசுக்கு கெடுவிதித்த தமிழிசை சவுந்தரராஜன்

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2015 (00:10 IST)
தமிழகத்தில் மதுவிலக்கு அறிவிப்பை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் தமிழக அரசு அறிவிக்காவிட்டால், பாஜக சார்பில், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.


 

இது குறித்து, சென்னையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
மதுவிலக்கை அமுல்படுத்தக் கோரி போராட்டம் நடத்திய, காந்தியவாதி சசி பெருமாளின் உறவினர்கள் அவரது உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
 
காந்தியவாதி சசி பெருமாள் குடும்பத்தினரை கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் காவல்துறையினர் கைது செய்து, தனித்தனி இடத்தில் அடைத்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
 
தமிழகத்தில், மது விலக்கை கொண்டு வருவது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனே கூட்ட வேண்டும். மாற்று வருமானம் குறித்து தொழில் முதலீட்டாளர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களிடம் தமிழக அரசு கருத்து கேட்க வேண்டும். வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குள் மதுவிலக்கு குறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும். இல்லை எனில் தமிழகம் முழுவதும் பாஜக போராட்டத்தில் ஈடுபடும் என்றார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்