குமரி அனந்தனுக்கு விஜயகாந்த் ஆதரவு

வெள்ளி, 18 டிசம்பர் 2015 (23:49 IST)
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மதுவிலக்கு பாதயாத்திரைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் முழு ஆதரவு தெரிவித்துள்ளார்.
அகில இந்திய மதுவிலக்கு பேரவை சார்பில் டிசம்பர் 25 முதல் பிப்ரவரி 12 வரை சென்னை முதல் கன்னியாகுமரி வரை 750 கிலோ மீட்டருக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் பாதயாத்திரை நடைபெற உள்ளது.
 
இந்த பாதயாத்திரைக்கு ஆதரவு தருமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன், தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கட்சி அலுவலகத்தில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட விஜயகாந்த் தனது பூரண ஆதரவைதெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்