மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, ஆகஸ்டு 4 ஆம் தேதி நடைபெறும் முழு அடைப்பை ஆதரிப்பதெனத் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி, குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் செல்போன் கோபுரத்தின் மீது ஏறிப் போராட்டம் நடத்திய காந்தியவாதி சசி பெருமாள் மரணத்தில் சந்தேகங்களும், மர்மங்களும் இருப்பதாக அவரது குடும்பத்தினர் கூறியுள்ளனர்.