தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது- உச்ச நீதிமன்றம் அதிரடி

சனி, 21 மே 2022 (16:59 IST)
தனியார் கல்லூரிகலில் கேப்டன்ஷிப் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் மருத்துவ கல்லூரிகளில் கல்வி கட்டணம் தொடர்பான வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன்பு இன்று  விசாரணைக்கு வந்தது.

அப்போது மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை சீரமைப்பது தொடர்பாக ஏற்கனவே மூத்த வழக்கறிஞர் சல்மான் குரிஷித் தலைமையில் அமைத்த குழுவின் பரிந்துரைகளை நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர்.   

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கேப்பிடேஷன் பீஸ் என்ற பெயரில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் தொகையை வசூலிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்