சாம்பாருக்கும் வந்தது ஆப்பு : எகிறியது பருப்பின் விலை

வெள்ளி, 9 அக்டோபர் 2015 (16:20 IST)
பருப்பின் விலை ஏகத்தும் எகிறி விட்டதால் பருப்பின் விலை உயர்ந்திருக்கிறது. இதனால் நாம் சாப்பிடும் சாம்பாருக்கும் இனி வரும் காலத்தில்  தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.


 

 
பொதுவாக தமிழனின் மதிய உணவில் சாம்பார் என்பது கண்டிப்பாக இடம்பெரும். திருமணம் உள்ளிட்ட எந்த சுப நிகழ்ச்சி என்றாலும் மதிய விருந்தின் போது சாம்பார் என்பது தவிர்க்க முடியாத சம்பிரதாயமகவே மாறிவிட்டது.
 
இப்போது அதற்கும் பிரச்சனை எழுந்துள்ளது. இந்தியாவில் இந்த வருடம் சரியாக மழை பெய்யாத காரணத்தால், துவரம் பருப்பின் உற்பத்தி குறைந்து, அதன் விலை கிடு கிடு என உயர்ந்துள்ளது. 
 
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் துவரம் பருப்பின் விலை கிலோவிற்கு ரூ.50 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிலோ துவரம் பருப்பின் விலை ரூ.170 முதல் ரூ.180 வரை உயர்ந்துவிட்டது. இதிலும் உயர்தர துவரம் பருப்பின் விலை கிலோ ரூ.190 வரை உயர்ந்துவிட்டது.

வெளிநாடுகளிலிருந்து பருப்புகளை இறக்குமதி செய்தாலும், அவை இந்தியாவில் உற்பத்தியாகும் பருப்புகளைப்போல் ருசியாக இல்லை என்று தெரிகிறது.
 
இதோடு உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு மற்றும் கடலைப் பருப்பு ஆகியவற்றின் விலையும் உயர்ந்துவிட்டது. விலை ஏறிய துவரம் பருப்பு இனி விலை குறைவதற்கு வாய்ப்பு இல்லை என்று சில வியாபாரிகளின் கூறியிருப்பது பலரின் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்